சிம்பு 48வது படத்தில் இரண்டு பாலிவுட் ஹீரோயின்கள்
ADDED : 548 days ago
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து வரும் தக்லைப் படத்தில் நடித்து வரும் சிம்பு, அதையடுத்து கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் தனது 48 வது படத்தில் நடிக்கப் போகிறார். தேசிங்கு பெரியசாமி இயக்கும் இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது.
ஹீரோ - வில்லன் என இரண்டு வேடங்களில் சிம்பு நடிக்கிறார். இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகைகளான கியாரா அத்வானி, ஜான்வி கபூர் ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களில் கியாரா அத்வானி, ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் படத்திலும், ஜான்வி கபூர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் தேவரா என்ற படத்திலும் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.