மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
473 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
473 days ago
ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன் நடித்துள்ள 'இந்தியன் 2' படத்தின் இசை வெளியீட்டு விழா ஜுன் 1ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த இசை விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த், ராம் சரண் கலந்து கொள்ள உள்ளார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சிரஞ்சீவி கலந்து கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.
சில முக்கிய படங்களின் இசை வெளியீட்டிற்கு மட்டுமே ரஜினிகாந்த் வருவார். 'இந்தியன் 2' படத்தின் இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன், அனிருத் என அவருக்கு வேண்டப்பட்டவர்கள் இப்படத்தில் இணைந்திருப்பதால் நிச்சயம் கலந்து கொள்வார். மேலும், ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தை ஷங்கர் இயக்கி வருவதால் ராம் சரண் வர உள்ளார்.
தமிழ் சினிமா படங்களின் இசை வெளியீடுகளில் மற்ற மொழி நடிகர்கள் அதிகம் கலந்து கொள்ள மாட்டார்கள். இருந்தாலும் மகன் படத்தை இயக்குவதால் சிரஞ்சீவியும் வருவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அவரும் வந்தால் இந்த இசை விழா சிறப்பானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
473 days ago
473 days ago