உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்கு, தமிழில் அனிருத்தின் அடுத்தடுத்த அதிரடி

தெலுங்கு, தமிழில் அனிருத்தின் அடுத்தடுத்த அதிரடி


தமிழ் சினிமாவில் யுடியூப் சென்சேஷன் இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். அவரது பல பாடல்கள் யுடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. ஷாருக்கான் நடித்த 'ஜவான்' படத்திற்கு இசையமைத்த பிறகு பான் இந்தியா இசையமைப்பாளராக மாறிவிட்டார்.

தெலுங்கில் அறிமுகமாகி அங்கு இன்னும் சூப்பர்ஹிட் படங்களைக் கொடுக்காமல் இருக்கிறார். இருந்தாலும் 'தேவரா' படம் அந்தக் குறையைப் போக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படத்தின் முதல் சிங்கிளான 'பியர்' பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. தெலுங்கில் 27 மில்லியன் பார்வைகளையும், ஹிந்தியில் 16 மில்லியன் பார்வைகளையும் அப்பாடல் கடந்துள்ளது.

அப்பாடல் வெளியான சில தினங்களில் 'இந்தியன் 2' படப் பாடலான 'பா ரா' பாடல் நேற்று வெளியானது. இப்பாடல் அனிருத்தின் வழக்கமான பாடலிலிருந்து மாறுபட்ட பாடலாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஆனால், யுடியூப் தளத்தில் இன்னும் குறிப்பிடத்தக்க பார்வையைப் பெறவில்லை. போகப் போக அது மாறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அடுத்தடுத்து இரண்டு அதிரடிப் பாடல்கள் மூலம் யுடியூப் தளத்தை அதிர வைத்துள்ளார் அனிருத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !