ஒரு மாத்திற்குள் ஓடிடிக்கு வந்த 'ரத்னம்'
ADDED : 513 days ago
ஹரி இயக்கிய படம் 'ரத்னம்'. விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, ராமச்சந்திர ராஜூ, கவுதம் வாசுதவ் மேனன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஸ்டோன் பென்ச் சார்பாக கார்த்திக் சுப்பராஜ் தயாரித்திருந்தார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
படத்தின் நாயகி பிரியா பவானி சங்கரை, நாயகன் விஷால் தன் தாயாக பார்க்கும் வித்தியாசமான கதை அமைப்புடன் இந்த படம் வெளிவந்தது. கடந்த மாதம் 26ம் தேதி வெளியான இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தன. ஆனால் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் படம் வெளியாகி ஒரு மாதம்கூட நிறைவடையாத நிலையில் இப்போது ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.