உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தக் லைப்பில் அதிரடி நடனத்திற்கு தயாராகும் த்ரிஷா

தக் லைப்பில் அதிரடி நடனத்திற்கு தயாராகும் த்ரிஷா

பொன்னியின் செல்வன் படத்தை முடித்த கையோடு அடுத்ததாக நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசனுடன் கைகோர்த்து தக் லைப் என்கிற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷா மீண்டும் இந்த படத்திலும் மணிரத்னம் டைரக்ஷனில் கதாநாயகியாக நடிக்கிறார் என்பது இன்னொரு ஆச்சரியம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் த்ரிஷா சம்பந்தப்பட்ட பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது. இந்த பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்து வருகிறார். படப்பிடிப்பிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள த்ரிஷா, “கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற ரிகர்சலின் போது என்னை ஒரு பாம்பாகவே உணர வைத்து விட்டார்கள். அதுமட்டுமல்ல இடைவிடாத சிரிப்பும் வேலையில் கவனமுமாக படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !