ஜூலை மாதத்தில் துவங்கும் கலகலப்பு 3 படப்பிடிப்பு
ADDED : 725 days ago
சுந்தர். சி இயக்கம் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் சூப்பர் ஹிட்டாகி இருப்பதுடன் ரூ.100 கோடி வசூலை கடந்து சுந்தர் சிக்கு முதல் நூறு கோடி படமாகவும் அமைந்துள்ளது. அடுத்து அவர் தனது இயக்கத்தில் வெளிவந்து வரவேற்பை பெற்ற கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை தயாரித்து, இயக்கயுள்ளார். இதில் ஜெய், விமல், மிர்ச்சி சிவா, வாணி போஜன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பை வருகின்ற ஜூலை மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.