தந்தையின் நண்பர்கள் புகைப்படம் பகிர்ந்து மம்முட்டி படத்திற்கு வாழ்த்து கூறிய சிபிராஜ்
ADDED : 505 days ago
மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் தற்போது டர்போ என்கிற படம் வெளியாகி உள்ளது. புலி முருகன் பட இயக்குனரும் ஏற்கனவே மம்முட்டியை வைத்து போக்கிரி ராஜா, மதுர ராஜா என்கிற இரண்டு படங்களை இயக்கியவருமான இயக்குனர் வைசாக் இந்த படத்தை இயக்கியுள்ளார். படம் முதல் நாளே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் நடிகர் சிபிராஜ் டர்போ படக்குழுவுக்கும் நாயகன் மம்முட்டிக்கும் இந்த படம் வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் தனது தந்தை சத்யராஜ், மோகன்லால் மற்றும் மம்முட்டியுடன் 90களில் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.