உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அமரன் படக்குழுவுக்கு பிரியாணி விருந்து அளித்த சிவகார்த்திகேயன்

அமரன் படக்குழுவுக்கு பிரியாணி விருந்து அளித்த சிவகார்த்திகேயன்

மாவீரன், அயலான் படங்களுக்கு பிறகு ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்க, ஜி.வி . பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து படக்குழுவினருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பிரியாணி விருந்து கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். இதை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அதன்பிறகு டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !