27 ஆண்டுகளுக்கு பிறகு கஜோலுடன் இணையும் பிரபுதேவா
ADDED : 521 days ago
2021ம் ஆண்டு ஹிந்தியில் சல்மான்கான் நடிப்பில் ராதே என்ற படத்தை இயக்கிய பிரபுதேவா, அந்த படத்தின் தோல்வி காரணமாக தற்போது முழு நேர நடிகராகிவிட்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 1997ம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் மின்சார கனவு என்ற படத்தில் கஜோலுடன் இணைந்து நடித்திருந்தார் பிரபுதேவா. இப்படத்தில் அரவிந்த்சாமியும் இன்னொரு நாயகனாக நடித்தார். இந்த நிலையில், 27 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஹிந்தியில் சரண் உப்பலபாடி என்பவர் இயக்கும் படத்தில் மீண்டும் கஜோலுடன் இணைந்து நடிக்கப் போகிறார் பிரபுதேவா. இப்படத்தில் அவர்களுடன் நஸ்ருதீன் ஷா, சம்யுக்தா மேனன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.