உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நான் உயிருடன் இருக்கிறேன் : பார்வதி நாயர் திடீர் பதிவு

நான் உயிருடன் இருக்கிறேன் : பார்வதி நாயர் திடீர் பதிவு

மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருந்த பார்வதி நாயர் 'என்னை அறிந்தால்' படம் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், சீதக்காதி படங்களில் நடித்தார். தற்போது, ஆலம்பனா, ரூபம் மற்றும் விஜய் நடிக்கும் 'கோட்' படத்தில் நடித்து வருகிறார்.

சினிமாவில் குறைவாக நடித்தாலும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்து வருகிறார். அடிக்கடி கவர்ச்சி படங்களை வெளியிட்டு லட்சக்கணக்கில் பின் தொடர்பவர்களை வைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அவர் எந்த பதிவையும் வெளியிடவில்லை. ரசிகர்களின் கமெண்டுகளுக்கும் பதில் அளிக்கவில்லை. ரசிகர்களும் அவருக்கு என்னாச்சு என்கிற ரீதியில் பல யூகங்களை வெளியிட்டு வந்தனர்.

இந்த நிலையில் தனது படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு “நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். நீங்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கும் அன்போடுகூடிய மெசேஜ்களுக்கும் நன்றி'' என்று கோபமாக பதிவிட்டுள்ளார்.

புதிய பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் துபாயில் உள்ள தனது குடும்பத்தினருடன் அவர் வசித்து வருவதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !