ஓய்வை முடித்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த்
ADDED : 522 days ago
நடிகர் ரஜினிகாந்த் 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்ததும் ஓய்விற்காக அபுதாபி சென்றிருந்தார். ஜுன் மாதம் முதல் வாரத்தில் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதால் இடையில் கிடைத்த நாட்களை ஓய்வெடுக்கவே அவர் அபுதாபி சென்றார்.
அங்கு ஐக்கிய அரபு அமீரக அரசு அவருக்கு 'கோல்டன் விசா' வழங்கியது. தொடர்ந்து அபுதாபியில் உள்ள சில இடங்களையும் சுற்றிப் பார்த்தார் ரஜினிகாந்த். அங்குள்ள அபுதாபி மந்திர் என்ற இந்து கோவிலுக்கும் சென்றார். அங்குள்ள கோவில் நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். அந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
சுமார் இரண்டு வார கால ஓய்விற்குப் பிறகு இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவரை பேட்டி எடுக்க பத்திரிகையாளர்கள் முயற்சித்தனர். ஆனால், அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து அவர் சென்றுவிட்டார்.