வரலட்சுமியின் திருமணம் தாய்லாந்தில் நடைபெறுகிறது
ADDED : 491 days ago
நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் ஆகியோர் திருமண நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு மும்பையில் நடைபெற்றது. அதையடுத்து அவர்கள் இருவரும் இரண்டு முறை வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்த நிலையில், வரப்போகிற ஜூலை மாதம் இரண்டாம் தேதி அவர்களது திருமணம் தாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நிக்கோலாய் குடும்பத்தினர் செய்து வருகிறார்கள். திருமணம் தாய்லாந்தில் நடைபெற்றாலும் அதற்கு முந்தைய நாள் மெஹந்தி நிகழ்ச்சி சென்னையில் உள்ள தாஜ் ஹோட்டலிலும் , அதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலிலும் நடைபெறுகிறது. அந்த வகையில் வரலட்சுமி சரத்குமார், நிக்கோலாய் ஆகியோரின் திருமணம் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.