உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நவம்பரில் வெளியாகும் ஹிந்தி 'பரியேறும் பெருமாள்'

நவம்பரில் வெளியாகும் ஹிந்தி 'பரியேறும் பெருமாள்'

மாரி செல்வராஜ் இயக்கிய முதல் படமான 'பரியேறும் பெருமாள்' கடந்த 2018ம் ஆண்டு வெளியானது. இதில் நாயகனாக கதிரும், நாயகியாக கயல் ஆனந்தியும் நடித்தனர். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசயமைத்திருந்தார்.

சாதி பிரச்னையைப் பேசியிருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சில விருதுகளையும் பெற்றது. இந்த படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆகிறது. கரண் ஜோகர் தயாரிக்கிறார். படத்திற்கு 'தடக் 2' என்று டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கதிர் நடித்த கேரக்டரில் சித்தார்த் சதுர்வேதியும், கயல் ஆனந்தி நடித்த கேரக்டரில் திரிப்தி டிம்ரியும் நடிக்கிறார்கள். இப்படம் வருகிற நவம்பர் 22ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !