வில்லன் நடிகர் தேவன் குமார் காலமானார்
ADDED : 513 days ago
நடிகரும், பின்னணி குரல் கலைஞருமான தேவன் குமார் உடல்நிலை குறைவால் நேற்றைய தினம் (மே 27) காலமானார். பல வருடங்களாக திரையில் முகம் காட்டாமல் இருந்து வந்த இவரை நாயகி சீரியல் தான் வில்லனாக அறிமுகப்படுத்தியது. அந்த தொடரில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டுகளை பெற்று வந்தது. இதனையடுத்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த தேவன் குமார் கடைசியாக கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்திருந்தார். கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் பல முன்னணி பிரபலங்களின் படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். இதனையடுத்து தேவன் குமாரின் இறப்பிற்கு சீரியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.