நிறுத்தி வைக்கப்பட்ட ரன்வீர் சிங் - ஹனுமான் பட இயக்குனர் கூட்டணி படம்!
ADDED : 506 days ago
தெலுங்கில் சாம்பி, ஹனுமான் ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் பிரசாந்த் வர்மா. குறிப்பாக ஹனுமான் திரைப்படம் யாரும் எதிர்பாராத வகையில் பெரிதளவில் உலகளவில் வசூலை அள்ளி குவித்தது. இதனால் இவரை தேடி பல முன்னணி நடிகர்கள் வந்தனர்.
ஹனுமான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரசாந்த் வர்மாவின் அடுத்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் கதாநாயகனாக ரன்வீர் சிங் நடிப்பதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் ரன்வீர் சிங், பிரசாந்த் வர்மா கூட்டணியில் உருவாகிருந்த 'ரக்ஷாஸ்' என்கிற படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. சரியான நேரம் வரும் போது தொடங்குவோம் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளனர்.