வணங்கான் படத்தின் ரிலீசை அறிவித்த தயாரிப்பாளர்
நாச்சியார் படத்தை அடுத்து பாலா இயக்கிய வர்மா என்ற படம் கைவிடப்பட்ட நிலையில், வணங்கான் படத்தை சூர்யா நடிப்பில் தொடங்கினார். பின்னர் கதை விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாட்டினால் சூர்யா அப்படத்தில் இருந்து வெளியேறிய நிலையில், அருண் விஜய் நடித்து வந்தார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் வணங்கான் படம் ஜூலை மாதம் திரைக்கு வர இருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருக்கிறார். அதோடு கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முன்பாக இயக்குனர் பாலாவும், அருண் விஜய்யும் நிற்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபட்ட நிலையில், அதே கன்னியாகுமரியில் எடுக்கப்பட்ட இந்த வணங்கான் புகைப்படமும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.