குட் பேட் அக்லி படத்தில் இணைந்த பிரபலங்கள்
ADDED : 491 days ago
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், 'குட் பேட் அக்லி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். இதில் நாயகியாக நயன்தாரா நடிப்பதாக கூறப்படுகிறது.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த 'பிரேமலு' படத்தின் மூலம் பிரபலமான நஸ்லின் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் இருவரும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.