தயாரிப்பு நிறுவனத்திற்கு ஷாக் தந்த நடிகர்
ADDED : 511 days ago
எப்போதுமே, தல நடிகர் ஒரு படத்தில் நடிக்க துவங்கி விட்டால், அதை முடித்துவிட்டு தான் அடுத்த படத்துக்கு செல்வார். ஆனால், தற்போது அவர் நடித்து வரும் ஒரு படத்தை தயாரிக்கும் பட நிறுவனம், உச்ச நடிகரின் படத்தையும் தயாரிப்பதால், 'பைனான்ஸ்' நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, சில மாதங்களாக தல நடிகரின் படத்தை கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் அதிருப்தியில் இருக்கும் நடிகர், அதற்குள், அடுத்த படத்தில் நடிக்க துவங்கி விட்டார். 'தற்போது நடிக்கும் புதிய படத்தில் நடித்த முடித்த பிறகு தான், முந்தைய படத்தில் மீண்டும் நடிக்க, 'கால்ஷீட்' கொடுப்பேன்...' என்று, மேற்படி படக்குழுவுக்கு, 'செம ஷாக்' கொடுத்து விட்டார்.