மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
459 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
459 days ago
கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் இந்தியன் 2 வருகிற ஜூலை மாதம் 12ம் தேதி திரைக்கு வர உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இவ்விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு, வசந்த பாலன், நெல்சன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஷங்கர் பேசியதாவது : அனிருத் இந்த நிகழ்ச்சியின் ஹீரோ. எனக்கு 100 சதவீதம் திருப்தி வர்ற வரைக்கும் வேலை பார்ப்பாரு. ரொம்ப நாட்களாக 'தாத்தா வர்றாரு' பாடலுக்கு அனிருத் செலவழிச்சார். இந்த தலைமுறைக்கு இந்தியன் தாத்தாவை கொண்டு போகிற மாதிரி 'கம் பேக் இந்தியன்' பாடலை பா.விஜய் எழுதியிருக்காரு.
இந்தியன் 1 முடிச்சதும் கமல் சார் இந்தியன் 2 பண்ணலாம்னு சொன்னாரு. அப்போ என்கிட்ட கதை இல்ல. 2.0 படம் முடிந்த பிறகு தான் இந்தியன் 2க்கான கதை கிடைச்சது. நாட்டில் நடக்கும் ஊழல்கள் பற்றி செய்திகள் வாயிலாக படிக்க படிக்க, இந்தியன் தாத்தா இப்போ நடக்கும் ஊழல்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை படமாக்க முடிவு செய்து, அதற்காக கதையை தயார் செய்து கமல் சாரிடம் சொன்னேன். அவரும் நடிக்க சம்மதித்தார்.
முதல் முறையாக இந்தியன் தாத்தாவாக மேக்கப் போட்டுட்டு வந்தப்போ எல்லோரும் சிலிர்த்துப் போய் பார்த்தோம். 25 வருஷம் கழிச்சு இந்த படத்தோட போட்டோ ஷூட்டுக்கு அதே மாதிரி மேக்கப் போட்டுட்டு வரும்போது அதே மாதிரி சிலிர்த்துப் போய் பார்த்தோம். 360 டிகிரி நடிகர்னு கமல் சார் பத்தி ஏற்கெனவே நான் சொல்லியிருக்கேன். 361வது டிகிரி என்னவென்றால் அவர் காலத்திற்கு ஏற்றபடி தன்னுடைய நடிப்பையும் மாற்றி இருக்கிறார். கிட்டதட்ட 70 நாட்களுக்கு மேல இந்தியன் தாத்தா மேக்கப் போட்டுருக்காரு.
விவேக் மற்றும் நடிகர் மனோபாலா ஆகியோர் நம்மைவிட்டு பிரிந்துவிட்டாலும் இந்தியன் 2 அவர்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. ஒரு இயக்குனருக்கு எவ்வளவு பெரிய எண்ணங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் சுபாஸ்கரன் போன்ற தயாரிப்பாளர் இல்லாமல் அது சாத்தியமாகாது. இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடிக்கும் காட்சிகள் இடம்பெறாது. ஆனால் இந்தியன் 3ல் அவர் வருவார். எஸ்.ஜே சூர்யா ஒவ்வொரு அசைவுக்கும் அதிகளவுல மெனக்கெடல் போடுவாரு. சித்தார்த்தோட வளர்ச்சியை ரொம்பவே ஆச்சரியமா பார்க்கிறேன்.
முதல்ல இந்தியன் 2 வேற தயாரிப்பாளர் தயாரிக்க வேண்டியதாக இருந்துச்சு. அப்போ சுபாஷ்கரன் இந்தியன் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் தயாரிக்கிறேன்னு சொன்னாரு. இந்த படத்தை ஸ்க்ரீனிங் பண்ணும் போது என்னுடைய அசிஸ்டன்ட்ஸ் வசனம் பத்தி நல்லவிதத்துல சொன்னாங்க. அதுக்குக் காரணம் ஜெயமோகன்தான். கபிலன் வைரமுதுவும் வசனம் எழுதியிருக்காரு. எளிய மக்களை பிரதிபலிக்கிற மாதிரி லக்ஷ்மி சரவணகுமார் வசனம் எழுதியிருக்காரு. இந்தப் படத்துல ஒரு பாடலுக்காக பொலீவியா போனோம். அங்க கண்ணு கூசுற அளவுக்கு வெளிச்சம் இருக்கும். பயங்கரமா குளிரும். இந்தப் படத்தோட அறிமுக சண்டைக் காட்சியை அனல் அரசு பண்ணியிருக்காரு. இந்த படத்துல செகண்ட் யூனிட் டைரக்ரா வேலை பார்த்திருக்கிற வசந்த பாலன், சிம்புதேவன், அறிவழகன் ஆகியோருக்கு நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.
459 days ago
459 days ago