உண்மை பேசுவதால் கஷ்டப்படுகிறேன் - சிம்பு
ADDED : 490 days ago
நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் உடன் ‛தக் லைப்' படத்தில் நடிக்கிறார். இதுதவிர அவரது தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு பேண்டஸி கலந்த சரித்திர படத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் சிம்பு மீது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். அதாவது, ஒப்பந்தப்படி தனது தயாரிப்பில் நடிக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரத்தில் சிம்புவிற்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு, ‛‛கமல் உடன் தக் லைப் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. உண்மையை பேசுபவர்களே இந்த உலகத்தில் அதிகம் கஷ்டப்படுகிறார்கள். நான் நிறைய உண்மை பேசியிருக்கிறேன். எனக்கு ரெட் கார்ட் எல்லாம் விதிக்கப்படவில்லை. சின்ன பிரச்னை இருந்தது, அதுவும் பேசி தீர்க்கப்பட்டது'' என்றார்.