உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிக்பாஸ் அபிஷேக்கிற்கு இரண்டாவது திருமணம்

பிக்பாஸ் அபிஷேக்கிற்கு இரண்டாவது திருமணம்

விஜே.,வாக இருந்து பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை நேயர்கள் மத்தியில் பிரபலமானவர் அபிஷேக் ராஜா. தற்போது இயக்குனராகவும் களமிறங்கி உள்ளார். இவருக்கு ஏற்கனவே தீபா என்பவருடன் திருமணமாகி விவாகரத்து செய்திருந்தார். இதுகுறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட பதிவு செய்திருந்தார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர் சுவாதி என்பவரை காதலிப்பதாக அபிஷேக் அறிவித்தார். அவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், சுவாதிக்கும் அபிஷேக்கிற்கும் தற்போது கோலாகலமாக திருமணம் முடிந்துள்ளது. அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகள் கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !