மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
454 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
454 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
454 days ago
சமீபத்தில் நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் கேரளாவில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட மலையாள நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளார். பாஜக சார்பில் போட்டியிட்ட இவர் முதன்முறையாக கேரளாவில் பாஜகவிற்கு எம்பி சீட் பெற்றுத் தந்துள்ளார். பிரச்சாரத்தின்போது இவர், “எனக்கு திருச்சூர் வேண்டும்.. எனக்கு திருச்சூரை தரணும்” என்பது போன்ற கோஷங்களை மக்களிடம் முன்வைத்து இந்த வெற்றியை பெற்றுள்ளார். அவருக்கு திரையுலகிலிருந்து பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் மலையாள நடிகையும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், சித்தா உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான நிமிஷா சஜயன் சோசியல் மீடியா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சிஏஏ மசோதா கொண்டுவரப்பட்ட போது அதை எதிர்த்து கேரளாவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டார் நிமிஷா சஜயன். அப்போது அதற்கு முந்தைய தேர்தலில் திருச்சூர் எனக்கு வேணும் என குறிப்பிட்டு தோற்றுப்போன சுரேஷ் கோபியை குறிப்பிடும் விதமாக சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து இருந்தார் நிமிஷா சஜயன்.
“எப்படி திருச்சூர் வேண்டும் என்று கேட்டவருக்கு திருச்சூரை நாம் கொடுக்கவில்லையோ, அதேபோல இப்போது இந்தியா வேண்டும் என்று கேட்கிறார்கள்.. அவர்களுக்கு நாம் அதை கொடுக்கக்கூடாது” என்று பாஜகவுக்கு எதிரான கருத்தை கூறியிருந்தார் நிமிஷா சஜயன்.
இந்த நிலையில் சுரேஷ்கோபி தற்போது தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் அவரது ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் நிமிஷாவின் சோசியல் மீடியா பக்கத்தில் கடுமையான மற்றும் ஆபாசமான கருத்துக்களை பதிவிட்டு சைபர் தாக்குதலில் இறங்கினர். இதனைத் தொடர்ந்து தனது கமெண்ட் செக்சனை ஆப் செய்து வைத்துள்ளார் நிமிஷா சஜயன்.
454 days ago
454 days ago
454 days ago