சார்பட்டா பரம்பரை 2 பட பணிகள் விரைவில் துவக்கம்
ADDED : 506 days ago
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வெளிவந்த திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை'. கடந்த 2021ம் ஆண்டு ஓடிடியில் வெளியானது. பசுபதி, துஷாரா விஜயன், கலையரசன், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகிறது என அறிவிப்பு வந்தது. இதை ஆர்யாவும் தயாரிப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்ததால் இந்த பட பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் இப்போது இந்த படத்தை தயாரிக்க மற்றொரு தயாரிப்பு நிறுவனமும் முன் வந்துள்ளது. இதனால் இந்த படத்தின் பணிகளை விரைவில் தொடங்க உள்ளனர்.