மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
478 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
478 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
478 days ago
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், ராணா, திஷா பதானி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛கல்கி 2898 ஏ.டி'. அறிவியல் கதையம்சத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் புஜ்ஜி என்ற ஒரு ரோபோ கார், முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறது. இந்த ரோபோவுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் டப்பிங் கொடுத்திருக்கிறார்.
கமல் வில்லனாக நடித்துள்ள இந்த படத்தில் அமிதாப் பச்சனின் கதாபாத்திரத்தை டிஏஜிங் தொழில் நுட்பத்தின் மூலம் இளமையாக மாற்றியுள்ளனர். இப்படத்தில் அவர் அசுவத்தாமன் என்ற ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்த கல்கி படத்தின் டிரைலர் ஜூன் 10ம் தேதியான நாளை வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இப்படம் இம்மாதம் 27ம் தேதி திரைக்கு வருகிறது.
478 days ago
478 days ago
478 days ago