உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: கமலுக்கு வில்லனாக நடிக்க மறுத்த ரகுவரன்

பிளாஷ்பேக்: கமலுக்கு வில்லனாக நடிக்க மறுத்த ரகுவரன்


அடிப்படையில் மலையாளியாக இருந்தாலும், தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளாக கோலோச்சியவர் ரகுவரன். நாயகன், வில்லன், குணசித்ரம் என பல பரிமாணங்களில் நடித்தவர். என்றாலும் அவரது வில்லன் கேரக்டர்களே இப்போதும் பேசப்படுகிறது. பயங்கரமாக சண்டை போட மாட்டார், நாயகனோடு கட்டி உருள மாட்டார், ஆனாலும் நாயகனுக்கு இணையாக வில்லத்தனத்தோடு எழுந்து நிற்பார். அவரது தனித்துவமான உடல் மொழியும், குரலும் அதற்கு காரணம்.

அவர் காலத்திய அத்தனை ஹீரோக்களுடனும் நடித்து விட்டார். ஆனால் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடித்தில்லை. 'நாயகன்' படத்தில் நாசர் நடித்த கேரக்டரில் ரகுவரனை நடிக்க வைக்க மணிரத்னம் விரும்பினார். ஆனால் கமல்தான் அந்த கேரக்ரில் நாசர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சிபாரிசு செய்து நடிக்க வைத்ததாக கூறுவார்கள்.

ஆனால் ரகுவரன் நடிக்க மறுத்தாலேயே நாசர் நடிக்க வைக்கப்பட்டார். கமலுடன் நடிக்காதது குறித்து பின்னாளில் ரகுவரன் அளித்த நேர்காணல் ஒன்றில், ''கமலோட எந்த படத்தை வேணாலும் போட்டுப்பாருங்க, அவர் நடிக்கிற ஒவ்வொரு சீன்லேயும் அவர்தான் நிப்பாரு, எப்படிப்பட்ட சீனாக இருந்தாலும் அவரை தாண்டி யாரும் ஸ்கோர் பண்ண முடியாது. அவரோடு நடித்த டம்மி ஆகுறதை விட, நடிக்காம இருக்கிறதே நல்லதுன்னு முடிவு பண்ணினேன். அவர் நடிப்பு மேல இருந்த பயம்தான் காரணம்” என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Senthoora, Sydney
2026-01-13 05:08:55

மதிக்க தெரிந்த நடிகர்கள் நீண்டநாள் திரையுலகில் வாழ்ந்தது இல்லை, ஆனால் என்று நீங்காமல் நிறைந்திருப்பார்கள்,