உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: தயாரிப்பாளராகி காணாமல் போன நடிகை

பிளாஷ்பேக்: தயாரிப்பாளராகி காணாமல் போன நடிகை


1930களில் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகி அதன்பிறகு நாயகி, இரண்டாம் நாயகி, குணசித்ர வேடங்கள் என 1970 வரை நடித்தவர் லட்சுமி ராச்சியம். 30க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

லட்சுமி ராச்சியம் தற்போதைய ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ஔகுவை பூர்வீகமாக கொண்டவர். சிறுவயதிலேயே மாமா நரசிம்மத்திடம் இசையும், சாலூரி ராஜேஸ்வர ராவிடம் ஹரிகதா காலட்சேபமும் கற்றார். தன் மாமா வெங்கட ராமையாவுடன் சேர்ந்து புவ்வுலா சூரி பாபுவின் நாடக நிறுவனத்தில் சேர்ந்தார். துலாபாரம் நாடகத்தில் நளினியாகவும், சிந்தாமணி நாடகத்தில் சித்ராவாகவும் நடித்து புகழ் பெற்றார்.

1952-இல் வெளியான 'ஷியாமளா' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு 'மன்னாதி மன்னன், சபாஷ் மாப்பிளே, இருவர் உள்ளம், என்னதான் முடிவு' படங்களில் நடித்தார். டி.எம்.சௌந்தரராஜன் கதாநாயகனாக நடித்த 'அருணகிரி நாதர்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். 'மரகதம்' என்ற படத்தில் ஜே.பி.சந்திரபாபுவின் ஜோடியாக நடித்துள்ளார்.

சினிமாவில் பிசியாக இருந்தபோதே கே.ஸ்ரீதர் ராவை மணந்தார், பின்னர் அவரது ஆலோசனைப்படி 'ராஜ்யம் பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இதன் மூலம் தாசி (1952), கிருஷ்ண லீலாலு (1959), ஹரிச்சந்திரா (1960), நர்த்தனசாலா (1963), சகுந்தலா (1966), கோவுல கோபண்ணா (1968), ரங்கேலி ராஜா (1971) உட்பட சுமார் 11 படங்களைத் தயாரித்தார். சினிமா தயாரிப்பால் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான லட்சுமி ராச்சியம் சினிமாவை விட்டே விலகினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !