'ஜனநாயகன்' சென்சார் விவகாரம்: விஜய் மவுனமாக இருப்பது சரியா?
ஜனநாயகன் சென்சார் விஷயத்தில் சென்சார் போர்டு முடிவு, சட்ட சிக்கல்களை அனைவரும் அறிவார்கள். சென்சார் போர்டு குறித்து பலர் கருத்து, கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், படத்தின் ஹீரோ இதுவரை வாய் திறக்கவில்லை. ஒரு அரசியல் கட்சி தலைவராகவும் இருக்கும் விஜய், ஜனநாயகன் பிரச்னைகள் குறித்த ஒரு வார்த்தை பேசவில்லை. ஒரு அறிக்கை கூட விடவில்லை. இது சரியா என்று பலரும் கேட்கிறார்கள்,
ஆனால், விஜய் தரப்போ, இப்போது விஷயம் கோர்ட்டில் இருக்கிறது. அவர் எது பேசினாலும் சிக்கல் ஆகிவிடும். தவிர, தனது கடைசி படம் நல்ல படியாக வந்து ஹிட் ஆகணும். திரையுலகில் தனது கடைசி படம் தோல்வி அடையக்கூடாது. கசப்பான அனுபவத்தை தரக்கூடாது என நினைக்கிறார். அவரை பொறுத்தவரையில் விரைவில் படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்பதே. அதனால், அவரும் பேசவில்லை, கட்சியினரும் பேசக்கூடாது எனசொல்லிவிட்டார்.
மாநில அரசு மூலமாக பிரச்னைகள் வரும். தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் வரும் என அவர் எதிர்பார்த்தார். சென்சார் மூலமாக பிரச்னை வந்து படம் முடங்கும் என கனவிலும் எதிர்பார்க்கவில்லை. படம் ரிலீஸ் ஆனபின் அவர் ஜனநாயகன் விவகாரம் குறித்து விரிவாக பேசுவார். இப்போதைக்கு படக்குழுவின் ஒரே கவலை. ஜனநாயகன் படத்தின் பைரசியில் நெட்டில் வந்துவிடக்கூடாது என்பதே'' என்கிறார்கள்.