ரஜினி படக்கதை தெரியும், சொல்லமாட்டேன்: சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்குவதாக இருந்த சிபி சக்ரவர்த்தி, கமல் தயாரிக்கும் ரஜினி நடிக்கும் படத்தை இயக்குகிறார். அது குறித்து தனது பாணியிலேயே விளக்கம் அளித்துள்ளார் சிவகார்த்திகேயன். ''என் அடுத்த படத்தை சிபி இயக்குவதாக இருந்தது. ஒரு நாள் போன் பண்ணிக்கொண்டே இருந்தார். நான் வேலை காரணமாக எடுக்கவில்லை. உடனே வீட்டுக்கு வந்துவிட்டார். 'சார், எனக்கு ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது' என்றார்.
நானும் அதை புரிந்துகொண்டேன். என்னை வைத்து அவர் இயக்க இருந்த கதை வேறு. அது அப்படியே இருக்கிறது. நாங்கள் விரைவில் இணைவோம். ரஜினி சார் பட கதை வேறு. எனக்கு அது தெரியும். ஆனால் சொல்லமாட்டேன். ரஜினியை வைத்து சிபி இயக்கும் படத்தில் நடிப்பேனா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். நான் தயாரித்த படங்கள் பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கவில்லை. அந்த குறையை ராதிகா மேடம் நடிக்க, நான் தயாரிக்கும் 'தாய்கிழவி' படம் பூர்த்தி செய்யும், அடுத்து வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறேன்'' என்கிறார்.