உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா

மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா


பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கடந்த சில வருடங்களாகவே வரலாற்று படங்களிலும் மறைந்த தலைவர்களின் சுயசரிதை படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற லோக்சபாத் தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆகவும் ஆன பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

இந்த நிலையில் தற்போது 'பாரத் பாக்கிய விதாதா' என்கிற படத்தில் நடிக்கிறார் கங்கனா. இந்த படம் கடந்த 2008ல் மும்பையில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தின் பின்னணியில் கடந்த நிகழ்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

குறிப்பாக மும்பையில் இருந்த இரண்டு மருத்துவமனைகள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்ற போது அங்கு இருந்த செவிலியர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் அந்த இக்கட்டான சூழலை எப்படி லாவகமாக கையாண்டு மீண்டார்கள் என்பதை பற்றி இந்த படம் பேசுகிறது. இதில் செவிலியர் கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். மனோஜ் கபாடியா என்கிற அறிமுக இயக்குனர் இந்த படத்தை இயக்குகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !