உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது

சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த வந்த சாய் பல்லவி, ஏக் தின் என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகிறார். காதல் கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகன் ஜூனைத்கான் சாய்பல்லவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். சுனில் பாண்டே என்பவர் இயக்கி உள்ள இந்த படத்தை அமீர்கான் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. மே ஒன்றாம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், சாய் பல்லவி, ஜுனைத்கான் சம்பந்தப்பட்ட ரொமான்டிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து ஹிந்தியில் தயாராகி வரும் ராமாயணா படத்தின் இரண்டு பாகங்களிலும் சீதை வேடத்தில் நடித்துள்ளார் சாய்பல்லவி. இந்த படத்தின் முதல் பாகம் வருகிற தீபாவளி தினத்தில் திரைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !