உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர்

தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர்


மலையாள திரையுலகில் அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்கள் என்றால் 'திரிஷ்யம் 3' மற்றும் 'பேட்ரியாட்' இரண்டும் தான். இந்த இரண்டு படங்களிலுமே மோகன்லால் நடித்திருக்கிறார். இதில் பேட்ரியாட் படத்தில் மோகன்லால், மம்முட்டி இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்து நடித்துள்ளனர். பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 23ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு தொடர்ந்து போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.

ஆனால் கேரள திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் படத்தின் வசூலில் பங்கு சதவீதம் பிரிப்பது தொடர்பாக ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாக பேட்ரியாட் படத்தை நாங்கள் திரையிட மாட்டோம் என்று சமீபத்தில் அறிவித்தார்கள். இதனால் இந்த படத்தின் ரிலீஸில் சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்பட்டது. அதேசமயம் திரையரங்கு உரிமையாளர்களின் இந்த அறிவிப்புக்கு பிறகும் வெளியான பேட்ரியாட் படத்தின் மகளிர் தின போஸ்டரில் கூட ரிலீஸ் தேதியை பதிவு செய்தே வெளியிட்டு இருந்தார்கள்.

ஆனால் தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'காட்டு தோட்டப்போல்' என்கிற பாடல் இன்று வெளியாகி உள்ளது. இது குறித்த போஸ்டர் ஒன்றை இசையமைப்பாளர் சுசின் ஷியாம் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.. இந்த போஸ்டரில் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படவில்லை. அது மட்டுமல்ல சுசின் ஷியாம் வெளியிட்டிருந்த பதிவில் கூட படம் விரைவில் வெளியாகும் என்றுதான் கூறியுள்ளார். இதனால் குறிப்பிட்ட தேதியில் பேட்ரியாட் ரிலீஸ் ஆகுமா என்கிற சந்தேகம் தற்போது வலுவடைந்துள்ளது..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !