உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜனநாயகன்' படத்தில் 'ரோபோக்கள்' : தகவலை வெளியிட்ட ஒரிஜனல் இயக்குனர்

'ஜனநாயகன்' படத்தில் 'ரோபோக்கள்' : தகவலை வெளியிட்ட ஒரிஜனல் இயக்குனர்

வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வர வேண்டிய 'ஜனநாயகன்' படம் எப்போது வெளியாகும் என்பது இனிமேல்தான் தெரியும். இதனிடையே, அதன் ஒரிஜனல் படமான 'பகவந்த் கேசரி' தெலுங்குப் படத்தை இயக்கிய அனில் ரவிப்புடி, கடந்த சில நாட்களாக பல யு டியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து வருகிறார். அவரிடம் மறக்காமல் 'ஜனநாயகன்' பற்றிய கேள்வியை எழுப்புகிறார்கள்.

அந்த விதத்தில் ஒரு சேனலில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில், “பகவந்த் கேசரி' படத்தின் மையக் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு அதை விஜய் சார் படமாக மாற்றியுள்ளார்கள். படத்தின் முதல் 20 நிமிடங்கள், இடைவேளை மற்றும் இரண்டாவது பாதியில் சில காட்சிகள் மட்டும் அப்படியே இருக்கலாம். வில்லனின் டிராக்கை முழுவதுமாக மாற்றி, பின்னர் 'ரோபோட்டுகள்' என சயின்ஸ் பிக்ஷன் படமாகவும் மாற்றியுள்ளனர்,” என்று தெரிவித்துள்ளார்.

'ஜனநாயகன்' டிரைலர் வெளியான போது அதில் 'ஏஐ' காட்சி ஒன்றை 'ஜெமினி ஏஐ' வைத்து பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரோபோட்டுகளுடன் விஜய் சண்டையிடுவது போலவும் காட்சி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சென்டிமென்ட், அரசியல், ஆக்ஷன் ஆகியவற்றுடன் சயின்ஸ் பிக்ஷனையும் சேர்த்து 'பல ஜானர்' படமாக இப்படம் உருவாகியிருக்கலாம் எனத் தெரிகிறது. அதற்கு இயக்குனர் அனில் ரவிப்புடி பேட்டிதான் சாட்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !