மகாராஜா படத்திற்கு யு/ஏ சான்று
ADDED : 489 days ago
குரங்கு பொம்மை பட இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி தனது 50வது படமாக 'மகாராஜா' எனும் படத்தில் நடித்துள்ளார். அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ், அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். காந்தாரா பட இசையமைப்பாளர் அஜனீஸ் லோக்நாத் இசையமைக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இத்திரைப்படம் வரும் ஜூன் 14ந் தேதி வெளியாகிறது. இந்தப்படம் சென்சாருக்கு சென்றபோது சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்ததாக அறிவித்துள்ளனர். குறிப்பாக இப்படத்தில் வன்முறை மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் யு/ஏ கொடுத்துள்ளனர்.