கூலி படப்பிடிப்பு தள்ளிப்போனது
ADDED : 675 days ago
வேட்டையன் படத்தை முடித்துவிட்ட ரஜினி அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படமாக 'கூலி' என்ற படத்தில் நடிக்கிறார். அனிரூத் இசையமைக்கிறார். இதில் ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு ஜூன் 10ம் தேதி துவங்கும் என ரஜினியே தெரிவித்து இருந்தார். இப்போது கூலி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் சென்னையில் தொடங்கவுள்ளதாக படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தெரிவிக்கின்றனர். இதுபற்றி விசாரித்ததில் படத்தின் திரைக்கதை பணி இன்னும் முழுமையாக முடியவில்லையாம். அதனால் தள்ளிப்போய் உள்ளதாக சொல்கிறார்கள்.