ரஜினிகாந்த் கடவுள் கொடுத்த வரம் : புகழ்ந்த அனுபம் கெர்
ADDED : 489 days ago
தமிழில் விஐபி, லிட்டில் ஜான், கனெக்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகர் அனுபம் கெர். இவர் சமீபத்தில் டில்லியில் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற விழாவில் கலந்து கொண்டார். இதே விழாவில் கலந்து கொள்ள ரஜினிகாந்தும் சென்றிருந்தார். அப்போது தன்னுடன் வந்த ரஜினியோடு ஒரு செல்பி வீடியோ எடுத்த அனுபம் கெர், ‛‛ரஜினிகாந்த் மனித குலத்திற்கு கடவுள் கொடுத்த வரம்'' என்று கூறியுள்ளார். அப்படி ரஜினியுடன் எடுத்துக் கொண்ட வீடியோவை தன்னுடைய எக்ஸ் பக்கத்திலும் அவர் பதிவிட்டு இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ வைரலாகி வருகிறது.