உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விரைவில் உருவாகும் கான்ஜூரிங் கண்ணப்பன் 2ம் பாகம்

விரைவில் உருவாகும் கான்ஜூரிங் கண்ணப்பன் 2ம் பாகம்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் 'கான்ஞ்சுரிங் கண்ணப்பன்' என்கிற ஹாரர் காமெடி படம் வெளியானது. சதீஷ், ரெஜினா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்தனர்.

இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு லாபம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இப்போது கான்ஜூரிங் கண்ணப்பன் 2ம் பாகத்திற்கான பணிகளில் செல்வின் ராஜ் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த பாகத்தையும் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !