உலக தந்தையர் தினம் - மகன்களுடன் விக்னேஷ் சிவன் விளையாடி மகிழும் வீடியோவை வெளியிட்ட நயன்தாரா!!
ADDED : 522 days ago
இன்று உலக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது . பல பிரபலங்களும் தங்களது தந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம், வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் நயன்தாராவும் தனது கணவரான விக்னேஷ் சிவன், உயிர், உலக் என்ற இரண்டு மகன்களுடன் விளையாடி மகிழும் ஒரு வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் தங்களது இரண்டு மகன்களுடன் ஜாலியாக கொஞ்சி விளையாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ குறித்து விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள பதிவில், எனது வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு காரணமே உயிர், உலக் என்ற இந்த இரண்டு மகன்கள் தான். அவர்களை மிகவும் நேசிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.