உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் அரசியலுக்கு செல்வதால் சினிமாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை : கஸ்தூரி

விஜய் அரசியலுக்கு செல்வதால் சினிமாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை : கஸ்தூரி

நடிகை கஸ்தூரி தனது சோசியல் மீடியாவில் சினிமா, அரசியல் குறித்த பலதரப்பட்ட கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு விஜய் அரசியலுக்கு செல்வதால் சினிமாவுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை.

விஜய் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் சினிமா 150 ஆண்டுகளுக்கு முன்பே தன்னுடைய பயணத்தை தொடங்கி விட்டது. விஜய்யோ அல்லது அமிதாப் பச்சனோ யார் சினிமாவை விட்டு வெளியேறினாலும், சினிமா எப்போதும் போல் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார் கஸ்தூரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !