கல்கி 2898 ஏடி பட விழாவில் பங்கேற்ற கர்ப்பிணி தீபிகா படுகோனே
ADDED : 555 days ago
கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்த மகாநடி என்ற படத்தை இயக்கிய நாக் அஸ்வின் தற்போது இயக்கியுள்ள படம் ‛கல்கி 2898 ஏடி'. சயின்ஸ் பிக்ஷன் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்க, அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். வருகிற 27ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் மும்பையில் நடைபெற்றது . அப்போது பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட நிலையில் தற்போது கர்ப்பிணியாக இருக்கும் தீபிகா படுகோனேவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.