உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கருடன் வெற்றி : உன்னி முகுந்தனை தேடி வந்த பொருளாளர் பதவி

கருடன் வெற்றி : உன்னி முகுந்தனை தேடி வந்த பொருளாளர் பதவி

மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வருபவர் உன்னி முகுந்தன். தமிழில் பல வருடங்களுக்கு முன்பு தனுஷ் நடித்த சீடன் படத்தில் கதாநாயகனாக நடித்த இவர் சமீபத்தில் வெளியான கருடன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார். அதுமட்டுமல்ல கடந்த இரண்டு வருடங்களாகவே தயாரிப்பிலும் இறங்கி மாளிகைப்புரம், மேப்படியான் உள்ளிட்ட சில படங்களை தயாரித்து லாபமும் ஈட்டி வருகிறார்.

இந்த நிலையில் மலையாள திரையுலக நடிகர் சங்கமான 'அம்மா'விற்காக நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் உன்னி முகுந்தன் போட்டியின்றி பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்தனை வருடங்களில் இவர் நடிகர் சங்கத்தில் இப்படி ஒரு முக்கிய பொறுப்பை ஏற்பது இதுதான் முதன்முறை. கருடன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படி ஒரு பதவி அவரை தேடி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !