50வது நாளில் 'அரண்மனை 4'
ADDED : 486 days ago
2024ம் ஆண்டில் முதன் முதலில் வசூல் ரீதியாக லாபத்தைக் கொடுத்த படம் 'அரண்மனை 4'. சுந்தர் சி இயக்கத்தில், தமன்னா, ராஷி கண்ணா, சுந்தர் சி, யோகிபாபு மற்றும் பலர் நடிப்பில் மே மாதம் 3ம் தேதி இப்படம் வெளியானது.
100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக சொல்லப்படும் இப்படம் 50வது நாளைக் கடந்துள்ளது. இந்த வருடத்தில் 25 நாட்களைக் கடந்து சில படங்கள் ஓடியுள்ளன. ஆனால், 50 நாட்களைக் கடந்த ஓடியுள்ள முதல் படம் இதுதான். ஒரு படத்தின் நான்காம் பாகம் வெளிவந்து அது 50 நாட்களைக் கடந்து ஓடுவதும், 100 கோடி வசூலிப்பதும் இதுவே முதல் முறை.
தற்போது ஓடிடியிலும் இப்படம் வெளியாகி உள்ளது. பேய்ப் படம் என்பதால் அங்கும் இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் வாய்ப்புள்ளது. விரைவில் 'அரண்மனை 5' படத்தின் அறிவிப்பு வந்தாலும் வரலாம்.