மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
440 days ago
குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி'
440 days ago
சில வருடங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்தவர் ஹர்பஜன் சிங், அதன் பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் கிரிக்கெட் வர்ணனையாளராக தனது பணியை தொடர்ந்து வருகிறார். மேலும் சோசியல் மீடியாவில் தமிழ் சினிமா தொடர்பாக அவ்வப்போது தூய தமிழில் டுவீட் போட்டு ஆச்சரியப்படுத்தவும் செய்வார். சினிமா மீது கொண்ட ஆசையில் சில ஹிந்தி படங்களிலும், சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்த ஹர்பஜன் சிங், கடந்த 2021ல் தமிழில் வெளியான பிரண்ட்ஷிப் என்கிற படத்தில் கதையின் நாயகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிக்பாஸ் புகழ் லாஸ்லியா இந்த படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார்.
அதன் பிறகு கடந்த மூன்று வருடங்களாக சினிமா பக்கம் தனது பார்வையை திருப்பாத ஹர்பஜன் சிங் தனது அடுத்த படம் குறித்த அப்டேட் தகவலை தற்போது தெரியப்படுத்தியுள்ளார். தனது அடுத்த படம் ஒரு சைக்கோ திரில்லர் என்றும் இந்த படத்தில் தான் ஒரு டாக்டராக நடிக்கிறேன் என்றும் கூறியுள்ளார் ஹர்பஜன் சிங். ஒரே இரவில் அடுத்தடுத்து நடக்கும் 12 கொலைகளை மையப்படுத்தி இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். ஆனால் இந்த படம் எந்த மொழியில் உருவாகிறது என்பதை தெரிவிக்கவில்லை.
இந்த தகவலை சமீபத்தில் இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது வர்ணனை செய்துகொண்டிருந்த சமயத்தில் போகிற போக்கில் ஒரு இடைச்செருகல் தகவலாக தெரிவித்தார் ஹர்பஜன் சிங். இது தவிர படம் குறித்து மற்ற விவரங்களை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
440 days ago
440 days ago