விஜய் 69வது படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்குகிறது!
ADDED : 533 days ago
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் கோட் படத்தின் இரண்டு அப்டேட்டுகள் நேற்று வெளியான நிலையில், விஜய் 69வது படம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் நேற்று விஜய்யை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் எச்.வினோத். அப்போது அவர்கள் இருவரும் 69வது படம் குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.
அதன்படி விஜய் 69வது படம் குறித்த அறிவிப்பை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட்டு, அக்டோபர் மாதம் படப்பிடிப்பை தொடங்கலாம் என்று முடிவெடுத்துள்ளார்களாம். அதோடு அரசியல் கதையில் உருவாகும் அப்படத்தில் சில காட்சிகளில் விஜய், கரை வேஷ்டி கெட்டப்பில் தோன்றி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.