மேலும் செய்திகள்
நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2'
440 days ago
செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு
440 days ago
மகாநடி, சீதா ராமம் படங்களுக்கு பிறகு துல்கர் சல்மான் நடித்துள்ள நேரடி தெலுங்கு படம் 'லக்கி பாஸ்கர்'. இந்த படம் தமிழ் உள்ளிட்ட மற்ற தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகிறது. துல்கர் ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில், வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார். நிவீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
படத்தின் முதல் பாடலான 'ஸ்ரீமதி காரு' வெளியாகியுள்ளது. தமிழில் 'கொல்லாதே' என்ற பெயரில் வெளியாகி உள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் லைவ் ஆர்கெஸ்ட்ரேஷனை இந்தப் பாடலில் பயன்படுத்தியுள்ளார். முக்கியமாக புல்லாங்குழல் மற்றும் ஸ்டிரிங்க்ஸ் கொண்டு வந்துள்ளார். இந்த படத்தில் துல்கர் வங்கி கேஷியராக நடிக்கிறார். வங்கி கொள்ளை தொடர்பான பீரியட் படமாக உருவாகி உள்ளது.
440 days ago
440 days ago