நினைத்தாலே இனிக்கும் தொடரில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் லாவண்யா
ADDED : 468 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து தொடரின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் லாவண்யா. தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக என்ட்ரி கொடுத்து கலக்கினார். மாடல் அழகியான இவர் இன்ஸ்டாகிராமிலும் அழகான புகைப்படங்களை வெளியிட இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. ஆனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு பின் லாவண்யா எந்தவொரு தொடரிலும் நடிக்கவில்லை. இதனால் ரசிகர்களும் மிகவும் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில், லாவண்யாவுக்கு தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நினைத்தாலே இனிக்கும் தொடரில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு லாவண்யாவை திரையில் காண இருப்பதால் அவரது ரசிகர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர்.