காதல் எமோஜிகளை பதிவு செய்த நிவேதா தாமஸ்
ADDED : 550 days ago
கமல்ஹாசனின் பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானவர் நிவேதா தாமஸ். அதன் பிறகு நவீன சரஸ்வதி சபதம், தர்பார் என பல படங்களில் நடித்தவர், தெலுங்கு, மலையாள படங்களிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். தற்போது 28 வயதாகும் நிவேதா தாமஸ் தனது சமூக வலைதள பக்கத்தில், சிறிது காலம் ஆகிவிட்டது..... ஆனால் இறுதியாக என குறிப்பிட்டு லவ் எமோஜியையும் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், தான் காதலில் விழுந்து விட்டதை தான் இப்படி தெரிவித்திருக்கிறார் நிவேதா தாமஸ் என்று கருதி, அவருக்கு வாழ்த்துகளை சொல்ல தொடங்கி விட்டார்கள்.