அர்ஜூன் தாஸிற்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்
ADDED : 465 days ago
கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்தவர் அர்ஜூன் தாஸ். அநீதி, ரசவாதி போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அர்ஜூன் தாஸ் அடுத்து அறிமுக இயக்குனர் ஹாசிம் அப்துல் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தை குட் நைட், லவ்வர் போன்ற படங்களை தயாரித்த மில்லியன் டாலர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளனர். இதில் அர்ஜூன் தாஸிற்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்கிறார்கள்.