மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
464 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
464 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
464 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
464 days ago
மலையாள காமெடி நடிகர் தர்மஜன் போல்காட்டி. இவர் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்ந்த தனது காதலி அனுஜாவை 16 வருடங்களுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர். தற்போது இவர்களுக்கு வேதா, வைகா என 2 மகள்கள் உள்ளனர்.
இந்தநிலையில் தர்மஜன் போல்காட்டி காதலி அனுஜாவை கொச்சி அருகே கொங்கேர்பள்ளி மகாதேவர் கோவிலில் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை அவர்களின் மகள்களே முன்நின்று நடத்தி வைத்தனர். பின்னர் பதிவு அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்தனர்.
இதுகுறித்து தர்மஜன் போல்காட்டி கூறும்போது, “16 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சில சூழ்நிலைகள் காரணமாக நாங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்போது குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று, திருமணம் செய்து உள்ளேன். எனது மகள்களின் விருப்பத்தை நிறைவேற்றி உள்ளேன்” என்றார்.
464 days ago
464 days ago
464 days ago
464 days ago