மழை பிடிக்காத மனிதனுக்கு 'யுஏ' சான்று
ADDED : 510 days ago
ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள படம் 'மழை பிடிக்காத மனிதன்'. இன்பினிட்டி பிலிம் வென்ச்சர்ஸின் கமல் போஹ்ரா, டி லலிதா, பி.பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் தயாரித்துள்ளனர். விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ், டாலி தனஞ்செயா, முரளி ஷர்மா, சரண்யா பொன்வண்ணா, பிருத்வி அம்பர், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ராயின் இசையமைப்பில் வெளியான 'தீரா மழை' மற்றும் இசையமைப்பாளர் ஹரி டபுசியாவின் 'தேடியே போறேன்' ஆகிய இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். படத்தில் இடம்பெறும் சண்டைகாட்சிகளில் வன்முறையை சற்று குறைக்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.