உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கோட் படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்ற நிறுவனம்

கோட் படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்ற நிறுவனம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, சினேகா, பிரேம்ஜி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கோட். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி திரைக்கு வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. தற்போது கோட் படத்தின் வியாபாரம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை ஏற்கனவே விஜய் நடித்து வெளியான மெர்சல், சர்க்கார், மாஸ்டர், பீஸ்ட், லியோ போன்ற படங்களின் வெளிநாட்டு உரிமையை வாங்கிய ஹம்சினி நிறுவனமே வாங்கியுள்ளது. அதோடு இந்த கோட் படத்தை வட அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா போன்ற நாடுகளில் அதிகமான தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !